வானவில் மனிதர்கள்...
முகவுரை...
வாழ்க்கையின் வண்ணங்கள் பலவிதம் அவற்றின் சாயங்களை கவலை என்னும் பேர் சொல்லி நாம் வெளுத்துக்கொண்டே இருக்கிறோம்.. அந்த வண்ணங்களை பசுமைகளை நமக்குளே தக்க வைத்துகொள்ள ஒரு கன்னி முயற்சி தான் இந்த வானவில் மனிதர்கள் தன்னம்பிக்கை கட்டுரைகள்..இந்த பூமிபந்தில் எனது வருகை பதிவின் விவரம் 21 .. ஒரு 21 வயதுக்காரன் நமக்கு என்ன தன்னம்பிக்கை ஊட்டிவிட முடியும், என்ற என்ன ஆலைகள் நம்மில் எழுவதில் ஆச்சர்யம் இல்லை..நம் மனிதர்கள் ஒருவருவரிடமும் என்னென்ன பிடிக்கும் என்று கேட்டால்..வழக்கமாய் வரும் பதில்கள் இசை,நடனம்,இயற்கை,கணினி,கவிதை,ஓவிய,இவை கூட இல்லாதவர்களும் உண்டு.. அந்த வகையில் எனக்காக அந்த கேள்வி வந்தால் என்னுடைய பதில் மனிதர்கள் என்று இருக்கும்.. ஆம் மனிதர்கள் தான் ஒவ்வொரு மனிதனையும் அணு அணுவாய் ரசித்ததின் விளைவும் அவர்களிடம் நான் ஆராய்ந்த விசயங்களும் இதை எழுத தூண்டியிருப்பது ஆச்சர்யத்திர்கள்ளவே.....
வானவில் மனிதர்கள்...
இதில் சொல்ல நான் சொல்ல முற்பட்ட விஷயங்கள்......
வாழ்க்கை இதை எப்படி வாழ்வது, எப்படி சிரிப்பது,எப்படி இன்பதுன்பங்களை எதிர்கொள்வதென்பது பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்தாயிற்று.. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது..படிக்கும் வரைக்கும் படித்து முடித்த பின்னரும் ச்சே செம்ம புத்தகம்டா என்று வாய் நிறைய பாராட்டும் மகராசன்களே அதிகம்...அதை செய்துவிட்டு நம்மவர்கள் அவரர் வேலைகளில் இறங்கிவிடுகிறார்கள்..இறங்குவது தவறல்ல வழக்கமாய் இறங்கிவிடுகிறார்கள் என்பது தான் வருத்தம்...அந்த புத்தகங்களின் நோக்கு உங்களின் பாராட்டுக்களை பெறுவதல்ல..உங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிறப்பாய் வித்தியாச படுத்தியிருக்கிறது என்பது தான் அதனின் ஒவ்வொரு எழுத்துக்களின் தனிப்பெரும் குறிக்கோள்கள் ஆகும்...அதை நாம் வெறும் தன்னம்பிக்கை கட்டுரையாகவோ,இல்லை வெறும் personality developement article என்ற குறுகிய வட்ட எதிர்ப்பார்ப்போடு படித்தலே அவற்றின் பயனை நம்மிடம் இருந்து பிரிக்கிறது...
அதில் எழுதப்பட்டிருப்பவை நமக்கான நம் சம்பந்தமான நமது தீர்வுகள் என்று நம்பி அனுபவபூர்வமாய் படிக்க தொடங்குங்கள்..ஒவ்வொரு மேற்கோள்களையும் எடுத்துக்காட்டுகளிலும் வாழ்ந்து படியுங்கள்..அதனுள் உள்ள எழுத்துக்களை கண்வழியே இதயத்தில் இட்டு நிரப்புங்கள்..பிறகு உங்கள் வாழ்க்கை குறிப்பிலிருந்து,,ச்சே.. எத்தன தடவ try பன்றது எல்லாம் வேஸ்ட் என்ற வார்த்தைகள் நித்\சாயம் நீக்கப்பட்டிருக்கும்...வாழ்க்கையின் வீசையும் உங்களின் திருப்திக்கான நீள அகலங்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும்..
இந்த நம்பிக்கைகளோடு தான் இந்த உங்களுக்கான தீர்வுகளை உங்களில் உங்களாக எழுத முனைந்திருக்கிறேன்..இதை உங்கள் நண்பர் உறவினர் என்று எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் பசுமையான இல்லையில்லை வண்ணமையமான மனிதர்கள் செய்வோம்......
இந்த வலைப்பதிவில் புதுப்புது தலைப்புகளோடு தன்னம்பிக்கை கட்டுரைகள் வெளியாகும் படித்து சிந்தியுங்கள்...நண்பர்களே.....
இப்படிக்கு நட்பார்ந்த
மணிகண்டன்
மணிகண்டன்