அன்பு காட்டுங்கள்....
அன்பு காட்டுங்கள் என்று சொன்னதுமே உங்களுக்கு இப்படி தோணலாம்
வந்துட்டான்யா வள்ளலாரு, பெரிய ஜாக்கிவாசுதேவ்னு நெனைப்பு..
இப்படி பலமாதிரியான கருத்துக்கள் உங்களுள் தோன்றலாம்..எது எப்படியாயினும்
ஒரு இறுக்கமான சூழலை வண்ணமையமாக மாற்ற வல்ல சக்தி கொண்டது அன்பு
உதாரணமாகா ஒரு சின்ன விஷயம் சொல்றேன் கேளுங்க...
ஒரு தேசிய நெடுஞ்சாலை அதன் இருமருங்கிலும் பச்சை
பசேல் மரங்கள் அதன் மஞ்சள் நிற பூக்கள் எல்லாம் சாலையில் விழுந்து
கிடந்தது.அங்கே ஒரு நாய் தன் ஏழு எட்டு குட்டிகளோடு நடு சாலையில்
படுத்துக்கிடந்தது..எதிரே ஒரு 100 அடி தொலைவில் ஒரு பேருந்தும் அதன்
பின்னால் ஒரு மத்திய வயது தம்பதியினர் இரு சக்கர வாகணத்தில் ஏதோ
வாக்குவாதத்தில் ஈடு பட்டுக்கொண்டு வருகிறார்கள்.
பேருந்து நெருங்குவதை உணர்ந்த தாய் நாய் ஓவென்று கத்திக்கொண்டு
சாலையை கடந்து ஓரமாய் செல்கிறது அதனை பின் தொடர்ந்து குட்டிகளும்
செல்கிறது, ஆனால் ஒரே ஒரு நாய்க்குட்டி மட்டும் அப்படியே அதே இடத்தில்
நடுசாலையில் கிடக்கவே சாலை ஓரம் நிற்கும் தாய் நாய்க்குட்டி கத்தி
கூச்சல் போடுகிறது,,எந்தெந்த கடவுள்களை அழைத்ததேன்று அதற்கு தான்
வெளிச்சம்...
நாய்க்குட்டி சாலையில் கிடப்பதை உணர்ந்த பேருந்து ஓட்டுனர்
சுதாரித்து கொண்டு நிறுத்தினார் பின்னால் வந்த தம்பதியினரின் மோட்டார்
வாகனம் நிற்கிறது தாய் நாய் தன் குட்டியிடம் வந்து ஏதேதோ கத்தி கூச்சலிட
இரண்டும் சாலை ஓரம் செல்ல பேருந்து புறப்படுகிறது இருசக்கர வாகன
தம்பதியினரின் பார்வை அந்த நாய்க்குட்டியின் மீது வீழ்ந்தது..
அந்த தாய் நாய் தன் குட்டியை உச்சி முகர்ந்து முனங்கி அன்பினை வெளிப்படுத்தியது..
அதை பார்த்த இருசக்கர வாகன ஒட்டி அதவாது அந்த தம்பதிகளில் கணவன்
சொல்கிறார் நல்ல வேலை மண் லாரி வரமா போயிருச்சு..என்றதும் மனைவி
கொல்லென்று சிரித்துவிட அவர்களின் வாக்குவாதம் அன்பில் முடிகிறது....
இதில் என்ன தெரிகிறதென்றால் நாய்க்குட்டிகள் பரிமாறிக்கொண்ட
அன்பு அந்த தம்பதிகளின் இருக்க சூழலை மாற்றிவிட்டது.. ஒரு அக்ரினை
நாய்க்குட்டியாலேயே மனிதனின் சூழலை மாற்ற முடிகிறதென்றால் மனிதன்
மனிதனிடம் அன்பு காட்டினால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்....
காதலிப்பவர்களை பார்த்திருப்பீர்கள் காதல் வசப்படும் வரை அவர்கள்
வாழ்வுநிலை வேரறுமாதிரியாய் இருந்திருக்கும்..அதற்கு பின்
பாருங்கள்,அவர்களை நீங்கள் குழந்தைகளுக்கு மத்தியிலும்,செடி
கொடிகளிநூடேயும், பூக்களின் மகரந்த ஆராய்ச்சியிலும்
ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள் இந்த ரசிப்புத்தன்மை மிக்க சுவாரசியமான
வாழ்வினை தந்தது எது அன்பு தானே...
இதனால் தான் வள்ளுவரில் துவங்கி வள்ளலார், அன்னை தெரெசாவில் பயனித்து
இந்த மணிகண்டன் வரையிலும் அன்பு முன்வைக்கபடுகிறது...
இன்றைய மனிதர்கள் அன்பு காட்டுதலை கூட தட்டி கழிக்கிறார்கள்..இன்னும்
சில மேற்கத்திய விரும்பிகள் அன்பு காட்டுபவர்களை EMOTINAL IDIOTS என்றும்
வாய் கூசாமல் சொல்கிறார்கள்..காரணம் அவர்களின் மனநிலை அப்படி
மாற்றப்பட்டுவிட்டது அதாவது ஆண்டு வருமானம் இவ்வளவு இருக்கவேண்டும்,
அமெரிக்காவில் ஒரு வில்லாவும், இங்கிலாந்தில் ஒரு பிளாட்டும், வெளிநாட்டு
பயணங்களும் வேண்டும்..
இப்படியான எண்ணங்களில் தான் அவர்கள் வாழ்கிறார்கள்..இது தான்
வாழ்க்கைக்கான தேவை என்று அவர்களின் மனதிற்குள் பதியம்
போட்டுவிட்டார்கள்..இவற்றையெல் லாம் அடைந்தால் தான் சமூகத்தில நல்ல
அந்தஸ்த்து கிடைக்கும் என்று முடிவெடுக்கிறார்கள்..
இந்த காரணங்களிலாலேயே இவர்கள் அன்பு காட்டுவதுமில்லை காட்டினாலும்
ஏற்றுகொள்வதுமில்லை ஆனால் உள்ளுக்குள் ஏங்க மட்டும் செய்கிறார்கள்....
பல பேர் அன்பு காட்டும்படியாக வாழ்ந்த அன்னை தெரசாவிற்கு இல்லாத
சமூக மதிப்பா அந்த சம்பாதியங்களில் வந்துவிட போகிறது...அன்னை தெரசா
சம்பாதித்த அந்த சமூகம் எப்படி அவருக்கு வாய்த்தது அன்பு காட்டியதாலே
தானே... அன்பாக இருங்கள் உங்களுக்காக சமூகம் இருக்கும்..
இல்லை பொருள் ஈட்டி தான் சமுகத்தினை அந்தஸ்த்தினை சம்பாதிப்பேன்
என்றால் அதனால் சேரும் சமூகம் உங்களுக்காக சேர்ந்தது இல்லை உங்கள்
பொருள்களுக்காக சேர்ந்ததாய் இருக்கும்..
ரஜினி படத்தின் வசனம் போல் இருந்தாலும் இதுதான் ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம்...
இன்னும் சிலர் நான் எவ்வளவு அன்பா இருக்கேன் ஏன் என்ட்ட யாருமே அன்பு
செலுத்தாமல் இருக்கிறாங்க என்பார்கள்.. இங்கு தான் பிரச்சனை
ஆரம்பிக்கிறது இவர்கள் அன்பினை கூட பணப்பரிமாற்ற பரிவர்த்தனை போல் தான்
பார்க்கிறார்கள்..
அதெல்லாம் தெரியாது நான் இத்தனை கிலோ அன்பு செலுத்தியிருக்கேன் நீ
பதிலுக்கு இத்தனை கிலோ செலுத்தனுமென்றும் இவர்கள் சொல்ல தயாராய்
இருப்பவர்கள்..
இதனால்,,காட்டப்படுகிற அன்பினை கூட இவர்களால் உணர முடியவில்லை..
எதிர்பார்ப்பே இல்லாமல் காட்டப்படுகின்ற அன்பிற்கு நிச்சயம் அதை விட
பண்மடங்கு அதிகமாய் அன்பு கிடைப்பதில் ஐயமில்லை..எதிர்பார்ப்போடு அன்பு
செலுத்தும் போது அதை விட பண்மடங்காய் துன்பம் தான் கிடைக்கபெறும்..
எனவெ அன்பு காட்டுங்கள் எதிர்பார்ப்பின்றி...
இன்று வீட்டு சூழலில் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்து காட்டப்படும் அன்பின்
விகிதமும் வீரியமும் குறைந்து கொண்டே வருகிறது.அதற்கு பெற்றோர்கள்
சொல்லும் காரணம் அதிகமா அன்பு காட்டி ப்ரீயா விட்டோம்னா பையனோ பொண்ணோ
கெட்டு போயிருவாங்க என்பதாகும்..
கெட்டுபோவதற்கு காலையில் பீய்ச்சப்பட்ட பாலல்ல அவர்கள் உங்கள்
குழந்தைகள்..வீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் நடந்துகொள்ளும்
விதத்தில் தான் அவர்களின் எதிர்காலம் தீர்மாணிக்கபடுகிறது..
பிள்ளைகளுக்கு வீட்டில் முதல் அத்தியாவசிய தேவை அன்பு தான்...
இன்னும் சில பெற்றோர்கள் என் புள்ள எம்முன்னாடி நின்னுகூட
பேசமாட்டான்,அவ்வளவு மரியாதை என்பார்கள்..உண்மை தான் அவர்கள் முன்னாடி
நின்று கூட பேசுவதில்லை அவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு மூன்றாவது
மனிதனிடம் தம் பெற்றோர்களை பற்றி குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள்..
இன்றைக்கு பல இளம்பெண்கள் வீட்டில் அன்பு மறுக்கப்படுகிறபோது யாரோ ஒருவர்
இறக்கப்படுவதாய் காட்டிக்கொள்வதைகூட அன்பு என்று நம்பி அவர்கள் பின்னால்
சென்று தங்கள் வாழ்க்கையை சீரழித்துகொள்கிறார்கள்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?? உணவு போஷாக்கு ஊட்ட தெரிந்த
பெற்றோர்கள் அன்பு என்னும் அத்தியாவசியி போஷாக்கினை ஊட்டத்தவறியதன்
விபரீதம் ஆகும்..
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் தன்மானத்தை தீர்மானிக்கிறவர்கள்
என்றும் ATM மெசின் என்றும் பார்க்காதீர்கள்....
அன்பு காட்டுங்கள் அன்பாய் இருங்கள் வாழ்க்கை வசப்படும் வண்ணங்களோடு...
வண்ணங்கள் தொடரும்...
--அன்புடன் மணிகண்டன்
1.பேசுங்கள்
1.பேசுங்கள்
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் நமது இளைஞர்களின் குரல்வளையில் கைவைக்க தவற வில்லை.. முன்பு இருந்த தலை முறையினரை போல் நம்மவர்கள் அதிகமாய் பேசுவதில்லை..கல்லூரி விழாக்களிலோ , அலுவலக விழாக்களிலோ பேசுவதற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் சில சமயம் முன் அமர்ந்திருப்பவர்களிடம் சில கேள்விகளை கேட்பதுண்டு அப்படி கேட்கும் பொழுது பதில்கள் வருவதற்கு குறைந்தபட்சம் மூன்றரை நிமிடங்கள் ஆகிறது அதுவும் முடிவில்லாத தெளிவில்லாத பதில்கள்.. கேட்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டுமே முதலில் அவரொரு மனிதர் பிறகு தான் மற்றதெல்லாம்.ஒரு சக மனிதனின் கேள்வி நம்மை ஊமையாக்கிவிடுகிறது... இதில் என்ன வேடிக்கை என்றால் மனதில் தெளிவாய் பதில் இருந்தும் பேசுவதற்கு யோசிப்பது தான் கவலை...
ஆகவே முதலில் பதில் சொல்ல கூச்சத்தை தூரவைத்துவிட்டு எழுந்து கம்பீரமா நில்லுங்க பாஸ்..
நாம் அடுத்தவர்களிடம் பழகும் பொது எளிதில் பேசிவிடுகிறோம் ஆனால் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பொறுத்து தான் நாம் அவர்களிடத்தில் இடம்பிடிக்கிறோம்..பெரும்பாலும் புதியதாய் ஒருவரிடம் பேசும் பொழுது ஒரு கட்டத்தில் நாம் நம் சோகங்களையே அவர்களிடம் முன்வைத்து பேச தொடங்குவது மூலம் ஒரு குறுகிய கால வேலிடிட்டி உடைய இரக்க உணர்வை தான் அடுத்தவர்களிடம் இருந்து பெற முடியும் அன்பினை பெறுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று..குழந்தைகள் அழுதாலே சகிக்க முடியாத யுகத்தில் நாம் இருக்கும் பொழுது, நாம் அழுகை இழையோட பேசினால் எப்படி?!!! எனவே அடுத்தவர்களிடம் முக மலர்ச்சியோடு சந்தோசமாக பேச பழகுங்கள்..
இன்றைக்கு பலரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தொமெனில் நமக்கு கிடைக்கின்ற ஒட்டு மொத்த பதிலும் ஒன்றாகத்தான் இருக்கும்...
அது என்ன கேள்வி என்கிறீர்களா....
அதாங்க வாழ்க்கைக்கு அவசியம் எது என்றால்??நம் காதுகளில் விழுகின்ற பதில்.."பணம்."
இதற்காக தான் நாம் அதிகமாய் பாடுபடுகிறோம்...
சரிங்கப்பா பணத்தை தீர்மானிப்பது எது என்று அடுத்த கேள்வி கேட்டால் அடுத்து வந்து விழும் பதில் வேலை,,,
இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொரு சக்திகள் தான் தீர்மானிக்கிறது என்பது ஊரறிந்த உண்மை....
ஆனால் ஒட்டுமொத்தமாய் எல்லா சக்திகளையும் தீர்மானிப்பது எதுவென்று யோசித்தோமெனில்...
அதற்கான விடை நிச்சயம் பேச்சாகத்தான் இருக்க முடியும்...
பேச்சு தான் ஒரு மனிதனை நிர்மாணிக்கிறது....ஒரு மனிதனுக்குள் இருக்கும் அவனை பேச்சு தான் முன்னிறுத்துகிறது..
பேசியவர்கள்தான் நாடாண்டிருகிறார்கள் ஆழுகிரார்கள்..
எங்கள் ஊரில் பேச்சு சாதுரியம் கொண்டவர்களை இப்படி நகைச்சுவையாய் அழைப்பதுண்டு..
"உனக்கெல்லாம் வாய் இல்லாட்டி நாய் தூக்கிட்டு போய்டும்டா" என்று பாட்டிமார்கள் கூற கேட்டுள்ளேன்.... அது எந்த அளவு உண்மையென்று பேச்சால் ஜெயித்த சிலரை பார்த்த பின் தான் புரிந்தது..
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் நமது இளைஞர்களின் குரல்வளையில் கைவைக்க தவற வில்லை.. முன்பு இருந்த தலை முறையினரை போல் நம்மவர்கள் அதிகமாய் பேசுவதில்லை..கல்லூரி விழாக்களிலோ , அலுவலக விழாக்களிலோ பேசுவதற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் சில சமயம் முன் அமர்ந்திருப்பவர்களிடம் சில கேள்விகளை கேட்பதுண்டு அப்படி கேட்கும் பொழுது பதில்கள் வருவதற்கு குறைந்தபட்சம் மூன்றரை நிமிடங்கள் ஆகிறது அதுவும் முடிவில்லாத தெளிவில்லாத பதில்கள்.. கேட்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டுமே முதலில் அவரொரு மனிதர் பிறகு தான் மற்றதெல்லாம்.ஒரு சக மனிதனின் கேள்வி நம்மை ஊமையாக்கிவிடுகிறது... இதில் என்ன வேடிக்கை என்றால் மனதில் தெளிவாய் பதில் இருந்தும் பேசுவதற்கு யோசிப்பது தான் கவலை...
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் ஐயோ கீதா சிரிப்பாலோ, staff என்ன நினைப்பார்கள்,ராஜேஷ் கேலி பண்ணுவானோ என்ற நினைப்புகள் தான் நம்மை முடக்கிவிடுகிறது..
நாமும் நம் செயல்களும் அடுத்தவர்கள் முன் இயங்கும்
நாமும் நம் செயல்களும் அடுத்தவர்கள் முன் இயங்கும்
ஒரு விளம்பர பொருள் என்ற மனப்பான்மையே நம்மை அப்படி யோசிக்க செய்கிறது..அதில் இருந்து முதலில் நாம் வெளியேற வேண்டும்.. நமக்காகத்தான் நாம் நமக்காகத்தான் நம் பேச்சு செயல் அனைத்தும் என்ற மனநிலையை பற்றுவது அவசியம்...
பலர் கூடியிருக்கும் அறையில் நீங்கள் பதில் சொல்ல எழுந்து நின்று வாய் திறப்பதுவே உங்கள் முதல் வெற்றி அடுத்து தான் உங்கள் பதில் எல்லாம்..அடுத்தவன் சிரிக்கிறான் என்றால் விடுங்களேன் அது அவனுக்கான சிரிப்பாக கூட இருக்கலாம்
பலர் கூடியிருக்கும் அறையில் நீங்கள் பதில் சொல்ல எழுந்து நின்று வாய் திறப்பதுவே உங்கள் முதல் வெற்றி அடுத்து தான் உங்கள் பதில் எல்லாம்..அடுத்தவன் சிரிக்கிறான் என்றால் விடுங்களேன் அது அவனுக்கான சிரிப்பாக கூட இருக்கலாம்
ஆகவே முதலில் பதில் சொல்ல கூச்சத்தை தூரவைத்துவிட்டு எழுந்து கம்பீரமா நில்லுங்க பாஸ்..
நாம் அடுத்தவர்களிடம் பழகும் பொது எளிதில் பேசிவிடுகிறோம் ஆனால் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பொறுத்து தான் நாம் அவர்களிடத்தில் இடம்பிடிக்கிறோம்..பெரும்பாலும் புதியதாய் ஒருவரிடம் பேசும் பொழுது ஒரு கட்டத்தில் நாம் நம் சோகங்களையே அவர்களிடம் முன்வைத்து பேச தொடங்குவது மூலம் ஒரு குறுகிய கால வேலிடிட்டி உடைய இரக்க உணர்வை தான் அடுத்தவர்களிடம் இருந்து பெற முடியும் அன்பினை பெறுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று..குழந்தைகள் அழுதாலே சகிக்க முடியாத யுகத்தில் நாம் இருக்கும் பொழுது, நாம் அழுகை இழையோட பேசினால் எப்படி?!!! எனவே அடுத்தவர்களிடம் முக மலர்ச்சியோடு சந்தோசமாக பேச பழகுங்கள்..
அடுத்து மேடை பேச்சாளர்கள் தங்கள் பேச்சு மொழியாக ஆவேசத்தையே கடைபிடிக்கிறார்கள். நாலு பேர் முன்னதாக மைக் கட்டிவிட்டால் கத்திபேசுவதையே மேடை பேச்சு என்று நாம் கருதுவதற்கு காரணம் அரசியல் கூட்டங்களும்,ஊடகங்களும் ஏற்படுத்தய தாக்கமே ஆகும்..அப்படி கத்தி ஆவேசமாய் பேசுவதன் விளைவு தொண்டை கிழிவதும் சோடா குடிப்பதுமேயாகும்.. கத்தி பேசும் பொழுது நம் கருத்துக்கள் சிதறடிக்க படுகின்றன..எனவே ஒரு கூட்டத்தின் முன் பேசும் பொழுது பேச வேண்டிய கருத்தினை ஆரோக்யமாக அழுத்தி பேசுங்கள்..
பேசுபவர்கள் கேட்பவரின் தன்மையுணர்ந்து பேசுதல் வேண்டும்
வயல் வேலை பார்பவரிடம் ஆப்பிள்,
ஐ-போன் பற்றி பேசுதல் என்பது வெட்டி பேச்சு என்று
சொல்லும் லிஸ்ட்டில் கூட சேர்க்க முடியாத பேச்சு....
பேசுபவர்கள் கேட்பவரின் தன்மையுணர்ந்து பேசுதல் வேண்டும்
வயல் வேலை பார்பவரிடம் ஆப்பிள்,
ஐ-போன் பற்றி பேசுதல் என்பது வெட்டி பேச்சு என்று
சொல்லும் லிஸ்ட்டில் கூட சேர்க்க முடியாத பேச்சு....
ஆகவே கேட்பவர்கள் யாரோ அவர்களுக்காகவும் அவர்களை முன்னிறுத்தியும் நமது கருத்துக்களை
முன் மொழிய வேண்டும்..
பெண்கள் அதிகமாய் பேசினால் சிலர் அவள் ஓட்ட வாய், வாயாடி என்று முத்திரை குத்தி ஒதுக்குவதுண்டு..
நம் ஊர் பெண்களின் அடையாளமே அந்த பேச்சுதான் அதை நாம் முதலில் உணர வேண்டும்..
பெண்கள் பேச்சினை வரவேற்போம்..ஆயுதங்களின் தோல்வியில் தான் பேச்சுவார்த்தை முன்வைக்கப்படுகிறது...
நல்ல பேச்சாளர்கள் ஆயிரம் பாடகர்களுக்கு சமம் ஆகவே பேசுங்கள்....
----அன்புடன் மணிகண்டன்......
----அன்புடன் மணிகண்டன்......
வண்ணங்கள் தொடரும்..
2.சந்தோசப்படுங்கள்.....
இந்த பரபரப்பான 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார ரீதியாகவோ இல்லை பணி ரீதியாகவோ நம்மை நாம்
நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ள பட்டிருக்கிறோம்..இதனால் எல்லோரும் எந்திரத்தோடு எந்திரமாக ஐக்கியமாகிவிட்டோம்...நிலை நிருத்திக்கொள்ளல் அப்படியென்றால் என்ன? ?
சாதகமான ஒரு பொறுப்பை ஒரு நிலையை தக்கவைத்துகொள்வதையே நிலைநிறுத்துதல் என்கிறோம்.சரி..அப்படி தன்னை நிலை நிறுத்தி கொண்டவர்கள் எவ்வளவு தூரம் தங்கள் வாழ்க்கையின் பொழுதுகளை இன்பமயமாக கழிக்கிறார்கள்..இல்லை அவர்களால் கழிக்க முடிகிறதா நிச்சயம் இல்லை பெரும்பாலான உத்தியோகஸ்தர்கள் தான் அதிகமாய் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது ஆய்வுகளின் முடிவு. சக மனிதர்கள் முன்னும்,சமுதாயத்திற்கு முன்னும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள இவர்கள் முதலில் அடகு வைப்பது இவர்களின் சுயங்களையும், இவர்களையும் தான்..அப்படி சொந்த விருப்பு வெறுப்புகளை தொலைத்துவிட்டு சுய அடையாளங்களை தொலைத்துவிடுகிறார்கள்..இதனால் பாதிக்கப்படுவது என்னவோ இவர்களின் சந்தோச உணர்வு தான்..
சதா சந்தோசமாகவே இருந்துகொண்டு ஒரு நல்ல நிலையை அடைந்துவிட முடியுமா???
நிச்சயம் முடியும் .........ஆனால் சந்தோசத்தையும், அடைய வேண்டிய நிலைக்கான முயற்சியையும் பிரித்து விட்டால் அது கடினம்.நீங்கள் அடைய வேண்டிய நிலையை எப்பொழுதும் நாலு பேருக்கு முன்னால் இயங்கும் பொழுதுபோக்கு கருவியாக நினைக்காமல்..உங்களின் குறிக்கோளை உங்களுக்காக உருவாக்கிக்கொள்ளுங்கள் அதனை அழகியலோடு செயல்படுத்துங்கள்,விளைவாய் நீங்கள் அடைந்த நிலையம் சந்தோசமும் ஒரு புள்ளியில் உங்கள் வாழ்க்கையில் குவிந்திருக்கும்..
ஒவ்வொரு மனிதர்களிடம் இருந்தும் ஒவ்வொரு உணர்வுகளை நாம் உள்வாங்கி இருப்போம். அதை வைத்தே அவர்களை தீர்மானிக்கவும் எத்தனிக்கிறோம்..அவன் மொக்கை போடுவான்,அவன் சுயநலவாதி,அவன்கூட இருந்தா நேரம் போறதே தெரியாது..இப்படி ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொரு விதமாய் உள்வாங்கி இருப்பீர்கள் ஆனால் அந்த மேலோட்டமான உள்வாங்களையும் மீறி அவர்களிடம் பல்வேறு நல்ல பண்புகள், கவனிக்க வேண்டிய குணாதிசயங்கள் இருப்பதை மறந்துவிடுகிறோம்.குறுகிய வட்டத்தில் அடைந்து கொண்டு அடுத்துவர்களை உள்வாங்குவதால் விளைவது என்னவோ துன்பமும் துக்கமும் தான்.ஆகையால் அடுத்தவர்களை ஒரு குறுகிய நோக்கில் உள்வாங்கி இவன் இப்படி அவன் அப்படி என்று ஒருதலை பட்சமாக சான்றிதழ் வழங்குவதை விட்டுவிட்டு மற்றவர்களின் எல்லா பரிமாணங்களையும் பரிட்சயப்படுத்திகொள்ளுங்கள்..அதுதான் உங்கள் சந்தோசங்களின் அஸ்திவாரங்கள் உங்கள் கவலைகளின் கல்லறை பெட்டிகள்....
இப்படி தான் பலர் எதற்கு எடுத்தாலும் அலுத்துக்கொள்வார்கள் எவனுமே நல்லவன் இல்லடா எல்லாம் அவனவன் அவன் முன்னேற தான் பாக்குறான் நம்மளுக்கு யாருடா உதவுறாங்க என்று சதா சலித்துக்கொண்டே இருப்பார்கள்..இந்த மனப்பான்மை கொண்டவர்கள் அடுத்தவர்களை சக மனிதனாக பார்ப்பதில்லை ஒரு உதவும் இயந்திரம் ஆங்கிலத்தில் helping or troubleshooting machine என்ற தோணியில் தான் பார்க்கிறார்கள்..இவ்வாறு ஒருவரை எதிர் நோக்குவது என்பது நம்மை நாமே பலவீனப்படுத்தி கொள்வதாகும்..உங்கள் பிரச்சனையின் நீள அகலங்களை உங்களைவிட யாருக்கும் ஆழமாய் புரிந்திருக்க முடியாது உங்கள் பிரச்சனைக்கான தீர்வு உங்கள் மூலையில் இருக்கும் போது அடுத்தவர் கைகளை நம்புவதில் எந்த பலனுமில்லை..அப்படியே அடுத்தவர்கள் உங்களுக்கு முடிவுகள் தந்தாலும் உங்கள் பிரச்சனைக்கான நிரந்தரமான முடிவுகளை அவர்களால் தந்துவிட முடியாது.. சிந்திப்பதை விட்டுவிட்டு அடுத்தவர்கள் உதவவில்லை என்று பிரச்னையின் தன்மையை மோசமான அடுத்தக்கட்டதிற்கு எடுத்து செல்வதை விடுத்து ,நம் பிரச்சனைகளுக்கு நாமே தீர்வென்று ஒருமனதோடு யோசித்து பாருங்கள் நிச்சயம் சந்தோச இறகுகளால் உங்கள் இதயம் வருடப்பட்டிருக்கும்..
அதைவிட பலர் அது கிடைத்தால் தான் சந்தோசம் அவர்கள் பேசினால் தான் மகிழ்ச்சி என்று தங்களின் சந்தோசத்தினை தீர்மானிக்கும் சக்திகளாய் அடுத்தவர்களை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்...நம்மின் சந்தோச உணர்வுகளை நிர்மாணிக்கும் சக்திகளாய் இருக்கவேண்டிய பொறுப்பு நம்முடையதே தவிர அதனை அடுத்தவர்கள் வசம் விடுவதென்பது நம்மை நாமே அடுத்தவர்களுக்கு அடகுவைப்பதற்கு சமமாகும்..ஆகவே கோடிக்கணக்கில் பணத்தை கூட கடன் வாங்குங்கள் ஆனால் எக்காரணத்தை கொண்டும் அடுத்தவர்கள் சந்தோஷம் தருவார்கள் என்று ஏங்க வேண்டாம்...அப்படி அடுத்தவர்கள் தருகின்ற மகிழ்ச்சியும் நிலையானது அல்ல சிறிது நேரத்திலேயே பழைய குருடி கதவ திறடி என்று கவலைகள் நம் இதயக்கதவுகளை தட்ட ஆரம்பித்துவிடும்.. சில பேரின் மனப்பாண்மை இன்னும் குறுகலாய் ச்சே ...எப்ப பாரு அவன் சிரிச்சிட்டே இருக்கான், அவள பாரு எப்போதுமே கலர்புல்லா இருக்கா..., சக தோழர்களையே இப்படி நினைப்பதால் உங்கள் கவலை தான் மேலும் மெருகேற்றப்படுகிறது இதனால் பாதிக்கப்படுவதென்னவோ நம் மனதுதான்,,,அவன் சிரிக்கிறானா அவனோடு சேர்ந்து சிரியுங்கள்,, அவள் கலர்புல்லாக வந்தால் வாழ்த்து சொல்லுங்கள் ஆடைகளை பற்றி அளவளாவுங்கள் சிலாகித்து மகிழுங்கள்,,,,இந்த சிறு சிறு விஷயங்கள் தான் நம் சந்தோசத்திற்கான காரணிகள் இவற்றை விட்டுவிடாதீர்கள்...
சிலர் எப்பொழுதுமே கவலை இளையோடிக்கொண்டே தான் பேசுவார்கள் ஆகையால் கேட்பவர்களுக்கு வெறுப்பும் சலிப்புமே பேசுபவர்கள் மீது உண்டாகும்..சாமானிய மனிதர்களின் பேச்சுக்கே இந்த நிலை என்றால் இன்னும் வழிகாட்டி பேசுபவர்களில் பலர் இந்த முறையை தான் கையாளுகிறார்கள்..சாதித்த ஒருவரை பற்றி பேசும்போது இவர்கள் அதிகமாய் பேசுவது சாதித்தவர்கள் பட்ட சங்கடங்களையும் கஷ்ட்ட காலங்களையேயாகும் அதாவது அந்த கலக்டர் தினமும் 2o மைல் தூரம் நடந்து போய் தான் பள்ளிக்கொடம் படிச்சாரு,அவருக்கு நல்ல சட்டைகூட கிடையாது, அந்த இயக்குனர் சினிமாவுக்கு வரதுக்காக பல அவமானங்களை சந்தித்தார், அந்த எழுத்தாளர் காகிதம் வாங்கவே ரொம்ப சிரமப்பட்டார்,அந்த ஐ.டி கம்பெனி வளருவதற்கு பல தடைகளை சந்தித்தது, இப்படி சாதித்தவர்கள் பட்ட துன்பங்களையே முன்னிறுத்தி பேசி சாதித்தவர்கள் சாதிக்க முயற்சி செய்த காலத்தில் சந்தித்த இனிப்புமிக்க சுவாரசியம் மிக்க நிகழ்வுகளை தவறவிட்டு பேசுவதால்..சாதிக்க எத்தனிக்கும் இளைஞர்கள் பய உணர்விலும்,சலிப்பின் காரணத்தின் நாளும் அவர்களின் இலக்குகளை தவறவிட்டுவிடுவார்கள் ஆகையால் ஒருவருக்கு வழிகாட்டி பேசும் பொழுது அடுத்தவர்கள் பட்ட துன்பங்களை முன்னிலை படுத்தி பேசுவதை தவிர்த்து அவர்களின் இன்பங்களுக்கும்,மகிழ்ச்சியான தருணங்களுக்கும் முக்கியதத்துவம் கொடுத்து பேசினால் கேட்பவர்களின் லட்சிய பயணத்திற்கான சிறகுகள் மேலும் வலுப்பெறும்..
ஆகவே வழிக்காட்டுவதாய் நினைத்துக்கொண்டு மற்றவர்களின் பாதைகளுக்கு முள்ளினை தூவாதீர்கள்..
எத்தனை காலம் தான்
"முள் குத்தியவனுக்கு
மட்டுமே
தெரியும் அவன் வலி " என்ற பழைய சித்தாந்தங்களை பேசிக்கொண்டே இருப்பீர்கள்...காலம் மாறிவிட்டது "சாக்லேட் தின்பவனுக்கு தான் அதன் சுவை தெரியும்" என்று உங்கள் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் ஏன் மாற்ற கூடாது..மாற்றித்தான் பாருங்கள்...
எனவே சந்தோசப்படுங்கள்..சந்தோசத்தை தனிப்பட்ட விசயமாய் பிரித்து வைக்காமல் வாழ்க்கையின் அங்கமாய் எல்லா விசயங்களிலும் சந்தோச உணர்வோடு செயல்படுங்கள் இலக்குகள் எளிதே.....
----அன்புடன் மணிகண்டன்......
வண்ணங்கள் தொடரும்....
..